ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். இந்த தெய்வீக பணியை மாணவர்களுக்கு அளிக்க தன்னலமற்ற தியாக மனப்பான்மை இருக்க வேண்டும். பொதுவாக இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளில் அக்டோபர் மாதம் வரும் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவச் செல்வங்களை ஒளிரும் நன்முத்துக்களாய் சமூகத்தில் விதைத்திடும் நற்செயல் புரிந்திடும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியப் பணியின் ஒளிவிளக்காக திகழும் டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். மேலும் அன்பும், இரக்கம் பகுத்தறிவு சிந்தனைகளை கொண்ட ஒளி விளக்குகளை ஏற்றிடுவோம் என கூறியுள்ளார்.