மலையாள நடிகையான அமலாபால், சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமாகி பிரபுசாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். இந்நிலையில் நடிகை அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள கடாவர் படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது காதல் குறித்து கேட்டபோது, நான் என்னுடைய டீனேஜ் வயதில் ஒருவரை காதலித்தேன்,நானும் அவரும் ஒரு முறை தியேட்டருக்கு சென்றபோது அவருக்கு ரகசியமாக முத்தம் கொடுத்தேன் .அவருடன் தியேட்டருக்கு சென்று கார்னர் சீட் டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அப்போது அந்த காதலனுக்கு தான் முத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அந்த காதலன் யார், அவர் பெயர் என்ன என்பது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.