தியேட்டரில் வெளியாகும் மாஸ்டர் படத்தின் இடைவேளையில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. உலகமெங்கும் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது . வருகிற புத்தாண்டில் மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த படத்திற்காக ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இடைவேளையின் போது தியேட்டரில் நடிகர் தனுஷின் கர்ணன் பட மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .