மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். தற்போது இவர் ப்ரோ டாடி, அலோன், மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம், டுவல்த் மேன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தை பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சுவாரியர், பிரபு, ஆக்சன் கிங் அர்ஜுன், அசோக் செல்வன், கல்யாணி பிரியதர்ஷன், சுனில் ஷெட்டி உள்ளிட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
It’s time to break the seal of that stunning surprise and we can’t contain the joy!
You are about to experience one of the most marvellous visual treats in all its glory, from the place where its dashing frames deserve to be indulged in! pic.twitter.com/hS0hwJ5pC6— Mohanlal (@Mohanlal) November 11, 2021
ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ரோனி ராஃபெல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மரைக்கார் அரபிக் கடலின்டே சிம்ஹம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி இந்த படம் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.