விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லாபம். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் கலையரசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7சி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் .
#Laabam Grand Release On September 9th in Theaters Near You 🔥#SPJhananathan @immancomposer @KalaiActor @vsp_productions @thilak_ramesh @7CsPvtPte @Aaru_Dir @yogeshdir @LahariMusic @proyuvraaj @sathishoffl pic.twitter.com/EraapMmpd1
— VijaySethupathi (@VijaySethuOffl) August 25, 2021
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 9-ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது.