பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . இதன்பின் இவருக்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பூஜா ஹெக்டே தெலுங்கு மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதையடுத்து இவர் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
And we hve a new release date! B’day mnth jst got sweeter! OCT 8th!C u in THEATERS❤️Get ready to meet our #MostEligibleBachelor in theatres frm 𝐎𝐜𝐭 𝟖𝐭𝐡 2021🕺#MEBOnOct8th @AkhilAkkineni8 @hegdepooja @baskifilmz #PradeeshMVarma #BunnyVas #VasuVarma @adityamusic @GA2Official pic.twitter.com/Se4OAUar8Q
— Pooja Hegde (@hegdepooja) August 28, 2021
மேலும் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள ராதேஷ்யாம் திரைப்படம் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் அகில் அக்கினேனி கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.