Categories
சினிமா தமிழ் சினிமா

“தியேட்டர்கள் கணினி மயமாக்க வேண்டும்”…. கே ராஜன் பேச்சு….!!!!!!!!

தமிழ்நாடு திரைப்படத் துறைக்கு திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் வசூல் உண்மை நிலையை தெரிந்து கொள்வது இன்றைய சூழலில் இருக்கும் சவாலான விஷயங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோருக்குள் கருத்து மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 1168 திரைகளையும் கணினிமயமாக்க வேண்டும். அப்போதுதான் இதனை நேர்மையான முறையில் கண்காணிக்க முடியும் என கோரிக்கை எழுந்து வருகின்றது. இது பற்றி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கே ராஜன் கூறிய போது, டிக்கெட் விற்பனையில் வெளிப்படை தன்மை வேண்டும் என்பதே  எனது கருத்தாகும்.

இதனை கண்காணிக்க கூடிய சர்வரை தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் அரசாங்கத்தின் மேற்பார்வையிலும் என இரண்டு இடங்களிலும் வைக்க வேண்டும். அப்போதுதான் எல்லாம் நேர்மையாக நடைபெறும் ஆனால் இங்கே தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் வழக்கம் வந்துள்ளது. ஒரே நபர் கையில் 40 தியேட்டர்கள்  இருக்கின்றது. அதேபோல் படம் திரையிடுவதற்கு முன்பாகவே திரையிடும் விளம்பரங்கள் மூலமாக தொகையும் தருவதில்லை. எங்கள் படங்களை பார்க்க வருவதன் மூலமாகத்தான் விளம்பரங்களை ரசிகர்கள் பார்க்கின்றார்கள். அதனால் அதிலும் தயாரிப்பாளர்களுக்கு பங்கு வேண்டும். இதனை எல்லாம் அரசாங்கம் தன் கண்காணிப்பில் கொண்டு வர வேண்டும் அதற்கு தியேட்டர்களை கணினி மையமாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |