கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளின் அடிப்படையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க,
மற்ற தொழில்களை தொடங்க அனுமதி அளித்தது போல், திரையரங்குகளையும் திறக்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினர் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன்படி, நாடு முழுவதும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில்,
தியேட்டர்கள் திறக்கப்பட்டால் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பே ரண சிங்கம் திரைப்படம் அக்டோபர் 16இல் தியேட்டர்களில் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஊரடங்குக்கு பின் தியேட்டர்களில் வெளியாகும் பெரிய மற்றும் முதல் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.