Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…!!

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகில் கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் வந்தது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவை ஒட்டி நேற்று காலையில்  அரவாண் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் களப்பலியும்,அரவாண், வீரபத்திரன் சாமி வீதி உலாவும் நடந்தது. இதனைத் தொடர்ந்து மாடு வளைத்தல், அக்னி வசந்த உற்சவம், கோட்டை இடித்தல், கூந்தல் முடித்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

இதனை தொடர்ந்து கோவிலின் முன் தீக்குண்டம் அமைக்கப்பட்டு அதில் விரதமிருந்த திரளான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி உள்ளனர். அதன்பின் சாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் கருவேப்பிலைப் பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர். இந்த விழா ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் முன்னின்று செய்தனர்.

Categories

Tech |