Categories
மாநில செய்திகள்

திராவிடத்தை கொச்சைப் படுத்துறாங்க!…. அமைச்சர் ஜெயகுமார் அதிரடி பேச்சு….!!!!

சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க எம்.ஜி.ஆர் மன்றம் இணைச் செயலாளராக இருந்து வந்த கட்சி நிர்வாகியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி படத்தை திறந்துவைத்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 ஆம் வருடம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தாலிக்கு தங்கம் திட்டம் துவங்கப்பட்டது. இதை தற்போது புதுமை பெண் திட்டம் என மாற்றம் செய்து இருக்கின்றனர். அதாவது தாலிக்கு தங்கம் வழங்குவதை கைவிட்டு மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

சென்ற அ.தி.மு.க ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தின் வாயிலாக 7ஆயிரம் கோடி மதிப்பில், 7டன் தங்கம் 14 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். இப்போது மாதம் 1000ரூபாய் அரசு கல்லூரி மாணவிகளுக்கு மட்டும் என மாற்றம் செய்திருப்பது, யானை பசிக்கு சோளப்பொறி போல இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் தமிழகத்தில் சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என மக்களின், மாணவர்களின் நலனுக்காக பல திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்தினார்.

எனினும் தற்போது திராவிடமாடல் எனக்கூறி, திராவிடத்தையே கொச்சைபடுத்தி வருகின்றனர் திமுகவினர் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதற்கு ஓபிஎஸ்-ன் மகன் மனபூர்மவாக வரவேற்பதாக தெரிவித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ஜெய குமார், இது ஜெயலலிதா மற்றும் மக்களுக்கு செய்யும் துரோகம் என்று விமர்சித்தார். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ், தி.மு.க-வில் சேர்ந்து ஸ்டாலினுடன், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரையும் இணைத்து ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுங்கள் என நகைப்புடன் தெரிவித்தார். அதன்பின் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியின் கருத்து குறித்த கேட்ட கேள்விக்கு, என் ஸ்டேட்டஸ்க்கு தகுதியானவர்களின் கருத்துக்கு பதில் கூறுகிறேன்.

இதில் புகழேந்தி யாருன்னு தெரியாதவர். அவருடைய பேட்டியை பார்ப்பதில்லை. போரவரவர்களுக்கு எல்லாம் நான் பதில்சொல்ல தேவையில்லை என காட்டமாக கூறினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையில் பாஸ்மார்க் வாங்கியுள்ளார் என தெரிவித்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக்கல்வித் துறையில் பெய்யில் மார்க் வாங்கியுள்ளார். உதயநிதி ரசிகர் மன்றத்தை கவனிக்கும் புது துறை உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக செயல்பட்டு, அதில் தான் அவர் பாஸ் மார்க் வாங்கியுள்ளார் என கிண்டலாக பதில் அளித்தார். அத்துடன் பள்ளி கல்வி துறை மிக மோசமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

Categories

Tech |