Categories
மாநில செய்திகள்

“திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்!”…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்’ என்று உறுதிபட பேசியுள்ளார். மேலும், ‘உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன் தான் நான்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். “உங்களில் ஒருவன்” நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கை தான் உங்களில் ஒருவன் புத்தகம். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள், நான் அரசியல் பயிராகவே வளர்ந்தேன்.

கல்லூரி படித்தபோது நாடகம் போட்டது, திருமணம் செய்தது, திருமணமான 5 மாதத்தில் சிறை சென்றது என எல்லா திருப்பங்களையும் 23 வயதிற்குள் பார்த்தவன். கலைஞர் போல எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது. ஆனால் முயன்று பார்ப்பேன் எனத் தெரிவித்தேன். அப்படி முயன்று பார்த்தது தான் உங்களில் ஒருவன் நூல். எப்பொழுதும் உங்களில் ஒருவனாகவே இருப்பேன் என்பதை கூறும் விதமாகவே இந்த புத்தகத்திற்கு அப்படி பெயர் வைத்தேன். என் வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாகவே செயல்படுவேன் என்பதை உறுதிபட கூறுகிறேன்.

நான் திராவிட ஆட்சி முறைதான் எங்களது கோட்பாடு. திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும். நான் என்றும் மக்களில் ஒருவன் என்பதை சொல்லவே, உங்களில் ஒருவன் என நூலுக்கு பெயர் வைத்துள்ளேன்’ என்றார். மேலும், “தமிழகம், கூட்டாட்சி தத்துவம் பற்றி அதிகம் பேசி வரும் ராகுல் காந்திக்கு நன்றி. மாநில உரிமைகளை மீட்க நாம் ஒன்றிணைய வேண்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |