Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிடியன் ஸ்டாக் என்றால்…. ஒழுக்கம் தேவை இல்லை… திமுகவை சீண்டும் எச்.ராஜா

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரிலே இறங்கினார், ஸ்டாலின் பேண்டை தூக்கிவிட்டு இறங்குகிறாரா ? என்ன ஒரு குடும்பத்தோட ஆட்சி 54 ஆண்டு காலமா உள்ளது திரவிடியன் ஸ்டாக். ஆனால் இதே இது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது.

ஏன் திராவிடியன் ஸ்டாக் என்று சொன்னாலே தனிமனித நெறிமுறைகள் ஒழுக்கம் தேவை இல்லை. பொது வாழ்வில் ஒழுக்கம் நெறிமுறை தேவை இல்லை, நிர்வாகத்தில் நெறிமுறை ஒழுக்கம் தேவை இல்லை என்று நினைக்கின்ற ஒரு கும்பல் ஆட்சியிலிருந்ததினால், இன்றைக்கு வாட்டர் பாடியின் மீது நீதிமன்றம் கட்டப்பட்டிருக்கிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளை வாட்டர் பாடியில் தான் கட்டப்பட்டுள்ளது. அதே மாதிரி வள்ளுவர் கோட்டம் எங்க கட்டபட்டிருக்கு வாட்டர் பாடி.

நீங்கள் பார்த்தீர்களென்றால் சென்னையில் ஏரி வியூவ் ரோடு இருக்கிறது. ஆனால் ஏரி இருக்கிறதா ? இல்லையே. அந்த 54 வருடத்தில் கிட்டத்தட்ட 10,800 வாட்டர் பாடிகளை மூடி பஸ் ஸ்டாண்ட், அரசு அலுவலகங்கள், வள்ளுவர் கோட்டம், நீதிமன்ற கட்டிடம் இந்த மாதிரியாக ஒரு பொறுப்பற்ற நெறிமுறையற்ற ஒரு அரசாங்கம் இருப்பதால் தான் தொடர்ந்து இருக்கின்ற காரணத்தால் இன்றைக்கு மக்கள் இவ்வளவு தூரம் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |