மத்திய அரசை கண்டித்து திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. திருமருகல் பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட அமைப்பாளர் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிலையில் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் உருவப்படத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது. இதில் பலர் கலந்து கொண்டனர்.