Categories
மாநில செய்திகள்

“திராவிட கோட்டை தலைநிமிரும்”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோரை நாளை (மார்ச்.31) சந்திக்க இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில் இது குறித்து கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், டெல்லியில் திராவிட கோட்டை தலைநிமிரும். டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை நான் சந்திக்க உள்ளேன்.

ஏனெனில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, வரவேண்டிய வருவாய் வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மாநில நிவாரணத்திற்காக அவர்களை சந்திக்க உள்ளேன். மேலும் தேசிய தலைவர்களையும் நான் சந்திக்க உள்ளேன். அமீரக பயணம் வெற்றி அடைந்த நிலையில், அடுத்த பயணம் இந்திய ஒன்றியத்தை நோக்கி அமைகிறது என்று அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |