Categories
மாநில செய்திகள்

திராவிட மாடலுக்கு பதிலாக “வேறு நல்ல தமிழ் பெயரை வையுங்கள்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு….!!!!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிப்புகள் தடுக்கப்பட்டது. ஏனென்றால் உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கை தான் சிறப்பான பணி. மேலும் மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.  நமது நாடு உலகத்திற்கு ஆன்மீகம் உள்ளிட்ட பல துறைகளில் வழிகாட்டியாக திகழ்கிறது. இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கிரண் பேடியோடு  எப்போதும் என்னை ஒப்பிட்டு கூறி வருகிறார். அதில் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் நான் எனது பணியை தான் செய்கிறேன். அரசியல்வாதியாக செயல்படவில்லை.

இந்நிலையில் துணைநிலை ஆளுநராக நான் புதுச்சேரி மாநிலத்திற்கு மிகவும் துணையாக இருந்து வருகிறேன். மேலும் தலைமையோடு இணைந்து பணியாற்றுவதனால் தான் ஆக்கபூர்வமான பணியில் புதுச்சேரி செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் மாண்டஸ்  புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கருத்து சொல்வது சரியில்லை. ஆனாலும் சொல்கிறேன் தமிழ்நாட்டில்  திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் மாடல் என்பதன் பொருள் தமிழா. அதற்காக அவர்கள் சொல்வது எல்லாம் தமிழ் வார்த்தையாகாது. எனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேறு நல்ல தமிழ் பெயரை கண்டுபிடித்து வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |