Categories
மாநில செய்திகள்

“திராவிட மாடல் ஆட்சியின் மீது நம்பிக்கை” சமூக நீதியை காப்பாரா முதல்வர்….. எம்.பி ரவிக்குமார் திடீர் கடிதம்…..!!!!

கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கடந்த 1986-ஆம் ஆண்டு கலப்பு திருமணம் செய்வதற்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணை இயற்றப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் பணியில் இருக்கும் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அடுத்தபடியாக அரசு வேலைவாய்ப்பில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியின் போது ஆசிரியர் பணியிடங்களில் கலப்பு திருமணம் செய்து கொண்ட 287 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணையை முறையாக செயல்படுத்தவில்லை.

இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது அப்போதைய முதல்வருக்கு நான் கடிதம் எழுதி அனுப்பினேன். அதன் பின் திமுக தலைமையில் ஆட்சி அமைந்த பிறகும் கூட நான் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடிதம் எழுதி அனுப்பினேன். இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இதனால் திராவிட மாடல் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஏராளமான கலப்பு திருமண தம்பதிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை என்ற அரசாணையை  முதல்வர் செயல்படுத்தி சமூக நீதியை காக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Categories

Tech |