கடலூர் மாவட்டத்தில் உள்ள பூ.மணவெளி கிராமத்தில் வாசுகி என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டி அந்த இடத்தில் திரிசூலம் வைத்து வழிபட்டுள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்தில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாசுகியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட வாசுகிசு சக திருநங்கைகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் புவனகிரி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.