காங்கிரஸ் கட்சியின் தலைவர் கீர்த்தி ஆசாத் 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பா.ஜனதா கட்சியில் இணைந்து மூன்று முறை அவர் எம்பியாக இருந்தார்.
அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் குறித்து மறைந்த முன்னாள் மந்திரி அருண் ஜெட்லியை நேரடியாக விமர்சனம் செய்ததால் கீர்த்தி ஆசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த பிறகு 2018 ஆம் ஆண்டு கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில் கீர்த்தி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்து, நேற்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மம்தா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.