வைபவ் நடிப்பில் உருவாகி உள்ள காட்டேரி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் வைபவ் நடிப்பில் தயாராகியுள்ள காமெடி திரில்லர் திரைப்படம் ‘காட்டேரி’ . இயக்குனர் டீகே இயக்கியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா ,கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் . இப்படத்தை சென்ற டிசம்பர் 25-ல் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
அந்த அறிவிப்பில் , ‘கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் படத்தின் ரிலீஸ் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது . இந்தப்படத்தில் பணியாற்றியுள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்தப் படத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்’ என கூறியிருந்தார்கள். இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.