Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திரிஷாவின் பிளாக்கி இறந்துவிட்டது”…. சோகமாக புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு…!!!!

நடிகை திரிஷா வீட்டில் வளர்த்து வரும் நாய்களில் ஒன்று இறந்துள்ளதால் சோகத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இவர் தெருவில் ஆதரவின்றி திரியும் நாய்கள் மீது கருணை காட்டுமாறும் முடிந்த அளவு வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்துக்கொள்ளுமாறு கூறி வருகின்றார். மேலும் இவர் பீட்டா அமைப்பிலும் இருக்கின்றார்.

trisha

இந்த நிலையில் திரிஷா தற்போது கவலையில் உள்ளார். காரணம் என்னவென்றால் அவர் வளர்த்துவரும் நாய்களில் ஒன்றான பிளாக்கி ஏப்ரல் 16ம் தேதி இறந்துள்ளது. இதற்கு இறுதி சடங்கு செய்த புகைப்படத்தை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, டார்லிங் ஜனா/ பிளாக்கி இறந்து விட்டது. ஜனா எங்கள் வீட்டில் இருந்தது எங்களுக்கு கௌரவம். மேலும் அது என் கைகளில் கண்ணை மூடியது மிகப்பெரிய கவுரவம். என் தேவதை” என கூறியுள்ளார்.

Categories

Tech |