த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. இவர் தற்பொழுது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு “தி ரோட்” என பெயரிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் சபீர் கலக்கல் முன்னணி வேடத்தில் நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக், பிரசன்னா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்க சாம் சிஎஸ் இசையமைக்கின்றார். இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.