Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘திரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்… படப்பிடிப்பில் கலாட்டா செய்யும் மீனா- நதியா… வைரலாகும் புகைப்படம்…!!!

திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் மீனா- நதியா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. திரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ்-மீனா இருவரும் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகை நதியா நடித்து வருகிறார் . இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீனா-நதியா இருவரும் காமெடியாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மீனா மற்றும் நடிகை நதியா இருவரும் ராஜகுமாரன் உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |