ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013 ஆம் வருடம் திரைக்கு வந்த மலையாள திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியடைந்து அனைத்து மொழி திரை உலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. பாலியல் தொல்லை கொடுத்த பெண் போலீஸ் அதிகாரி மகனை கொலை செய்த தன்னுடைய மகளை காப்பாற்ற போராடும் தந்தையை பற்றிய கதையாக திரிஷ்யம் திரைப்படம் உருவாகியிருந்தது. ரூபாய்.5 கோடி செலவில் தயாராகிய இப்படம் ரூபாய்.75 கோடி வசூல் செய்து இருந்தது.
இதையடுத்து திரிஷ்யம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் எனும் பெயரில் ரீமேக் ஆனது. இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2021ல் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் 2 ஆம் பாகமும் வெளிவந்தது. இந்த நிலையில் திரிஷ்யம் திரைப்படத்தின் 3ம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணிகளை படக்குழு துவங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் திரிஷ்யம் 3 திரைப்படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.