Categories
அரசியல் மாநில செய்திகள்

திருக்குறளை எழுதியது அவ்வையார்… மீண்டும் அதிர்ச்சி…!!!

திருக்குறளை எழுதியது அவ்வையார் என்று பிரசார மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது “கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்” என்ற பழமொழியை “கூரை ஏறி வைகுண்டத்துக்கு போனவன்” என்று தவறாக கூறியுள்ளார். அதனைக் கேட்டு உடனே உஷாரான கட்சியினர் பழமொழியை சரியாக சொல்லிக் கொடுத்தனர். அதன் பிறகு மீண்டும் “கூரை ஏறி கோழி பிடிக்காதவன், கூரையேறி வைகுண்டத்திற்கு போன மாதிரி” என்று கூறினார். இந்த சம்பவம் கூட்டத்தில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருக்குறளை எழுதியது அவ்வையார் என பிரசார மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே மேடையில் இருந்த ஒருவர், திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் எனக் கூற, அதற்கு அமைச்சர் யார் எழுதினால் என்ன? நம்முடைய கருத்தை சரியாக இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |