Categories
மாநில செய்திகள்

திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்யும் பல்கலைக்கழகம்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் 1330 குறள்களையும், 133 அதிகாரங்களையும் கொண்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருக்குறளுக்கு என தனி சிறப்பு உண்டு. அரசு பேருந்துகள் தொடங்கி பள்ளி பாடங்கள் வரை அனைத்திலும் திருக்குறள் இன்றியமையாததாக உள்ளது. சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மீண்டும் காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்கிறது சென்னை பல்கலைக்கழகம் தொழில் தர்மத்திற்கான திருக்குறள் என்ற பெயரில் நடப்பு கல்வி ஆண்டில் பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை பல்கலைகழகம் இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை மாணவர்களுக்கு பாடமாக திருக்குறள் அறிமுகமாகிறது என்று துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |