மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நான்காவது மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகும். இந்த முறை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வெறும் 90 நிமிடங்களிலேயே முடித்துக்கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் எப்போதும் பட்ஜெட் உரையில் திருக்குறள் உள்ளிட்ட சங்க தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி பேசுவார்.
அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்ற திருக்குறளை பட்ஜெட் உரையின் போது மேற்கோள்காட்டிப் பேசினார். ஆனால் இந்த முறை அதற்கு மாறாக மகாபாரதத்தை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். அதாவது மகாபாரதத்தில் உள்ள 18 நூல்களில் 12-வது நூலான ஷாந்தி பர்வத்தை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டி பேசியுள்ளார்.
ஏனென்றால் கடந்த முறை தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இருந்தது. அதோடு மட்டுமில்லாமல் திருவள்ளுவருக்கு பலரும் காவி சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். எனவே நிர்மலா சீதாராமன் திருக்குறளை அப்போது மேற்கோள்காட்டி இருக்கலாம். ஆனால் இந்த முறை உத்தரப்பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பாஜகவிடம் திருக்குறளை எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. எனவே தான் நிர்மலா சீதாராமன் திருக்குறளை கூறாமல் மகாபாரதத்தை கூறியுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.