Categories
மாநில செய்திகள்

திருச்சிக்கு கடத்தப்பட்ட தங்கம்…. அதிரடியாக பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள்….!!!!!!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை போன்ற பல்வேறு வெளிநாடுகளுக்கு தினந்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்கத்தை மறைத்து கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாக நடைபெற்று வருகிறது.

அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு பயணி மற்றும் அவரது உடைமைகளை அதிகாரி சோதனை செய்தனர். அதில் அவரது உடமைகளில் இருந்து Hand Mixer, Hair Styler, Geepas Trimmer box with Charger, Portable Electric Juicer and a Baby Fan ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

அயன் பட பாணியில்அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்த போது இதில் 19.99 லட்சம் மதிப்பிலான 386.500 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து  தங்கத்தை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |