Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. “மாணவர்கள் இதனை செய்யாதீர்கள்”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!

திருச்சியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி கன மழை பெய்து வருகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தியில், கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணிக்கு 115.730 அடியை எட்டி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

அதுமட்டுமில்லாமல் நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்து கொள்ளுமாறும் தேவைப்பட்டால் பாதுகாப்பு இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காவிரி நீர் நிலையில் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன் பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும் பாதுகாப்பற்ற கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் அல்லது மாணவர்களை செல்பி எடுக்க அனுமதி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |