கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சியிலும் சுற்றுலா தளங்களை மூட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பொங்கல் விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொங்கல் விடுமுறை ஆன 15, 16, 17 தேதிகளில் சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை சுற்றுலா தளம் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.