திருச்சி அரியமங்கலத்தில் அகோரி மணிகண்டன் என்பவர் ஜெய் அகோரகாளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த தன் தாயின் சடலத்தின் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜை நடத்தியுள்ளார். மேலும் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்பவர் மணிக்கக்கண்ட அகோரியிடம் 8 வருடங்களாக அகோரி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் குரு அகோரி மணிகண்டனுக்கு சிஷ்யையான பிரியங்கா அகோரிக்கும் நேற்று அதிகாலையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் அகோரி மணிகண்டனின் குரு மதுரை பால்சாமி முன்னிலையில், மணமக்கள் உடல் முழுவதும் திருநீறுபூசிக்கொண்டு அகோரி கோலத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முன்னதாக சிறப்பு யாகமும் நடைபெற்றது. அந்த யாகத்தில் சக அகோரிகள் தம்புரா, மேளம் அடித்து மற்றும் சங்கொலி எழுப்பி ஹர ஹர மகாதேவா என்று முழங்கி கோஷமிட்டனர். மேலும் திருமணம் நடந்து முடிந்த பிறகும் மீண்டும் யாகம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.