தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் அரசு அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க கூடிய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் மூலமாக சுமார் 5,000 மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.எனவே இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை வேலைவாய்ப்பு இல்லா இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.