Categories
அரசியல்

திருச்சியில் இபிஎஸ்…. சென்னையில் ஓபிஎஸ்…. டென்ஷனில் திமுக அரசு….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் அதிமுக போராட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும், தலைமை கழக நிர்வாகிகளும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு கழக நிர்வாகிகளும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |