திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டி நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் ஹேண்ட்பால் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி கே.கே.நகர் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும் பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றது.
இந்த போட்டியை மேயர் அன்பழகன் தொடங்கி வைக்க ஹேண்ட்பால் சங்க செயலாளர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது.