சமீபத்தில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக ஆக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தனர். இதேபோல அமைச்சர் பாண்டியராஜனும் மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று தென் மாவட்ட அமைச்சர்கள் கருது தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்வார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். முதல்வர், துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சி இரண்டாவது தலைநகராக முயற்சி எடுப்போம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் மதுரையா ? திருச்சியா என அமைச்சர்களுக்கும் மோதல் தொடங்கி விட்டது.