திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து தேன்மொழி பாடல் வெளியாகி உள்ளது.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் தனுஷ் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் நித்யா மேனன்,பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர். திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிருக்கின்றது.
நீண்ட காலத்திற்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்போ இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.
இத்திரைப்படத்திலிருந்து தேன்மொழி பாடல் வெளியாகி இருக்கின்றது. அதில் தனுஷ் காதல் சோகம் பாடுகின்றார். அந்த பாடலில் தன் காதலியை நினைத்து கண்ணீர் விடுவதாக வரிகள் அமைந்திருக்கின்றது.
#Thenmozhi Sung by @Music_Santhosh out now
🎵 https://t.co/F97JSXkCwb@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/wgtYnv8vYM
— Sun Pictures (@sunpictures) July 30, 2022