Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆதரவற்றோருக்கு உதவிய காவலர் – குவியும் பாராட்டு

சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்து உடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில்  ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் அனைவரையும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேருக்கு முடி திருத்தம் செய்ய முயன்ற அவருக்கு, அந்த வழியாக சென்ற இளைஞர்களும் உதவி செய்தனர்.

பின்னர் அவர்களை குளிக்க வைத்து, புதிய உடைகளை அணிய வைத்துள்ளனர். இதையடுத்து அந்த மூவரும் ஆட்டோ மூலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீதியில் ஆதரவற்று இருந்தவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தித் தந்த காவல் உதவி ஆய்வாளரின் செயலை பலரும் பாராட்டினர்.

Categories

Tech |