Categories
மாநில செய்திகள்

திருச்சி – இலங்கை…. விமான சேவை ரத்து…. திடீர் அறிவிப்பால் பயணிகள் ஏமாற்றம்….!!!

பிரபல நாட்டிற்கு திடீரென விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு 3 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு தினசரி 2 விமான சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இந்த விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக ஏற்றி சென்றனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள கொழும்புவில் இருந்து காலை 9:30 மணிக்கு புறப்படும் விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். அதன்பின் காலை 10:30 மணிக்கு திருச்சியில் இருந்து கிளம்பி இலங்கைக்கு செல்லும். இதனையடுத்து இலங்கையில் இருந்து மதியம் 2:30 மணி அளவில் திருச்சிக்கு வரும் விமானம் மதியம் 3:30 மணி அளவில் மீண்டும் இலங்கைக்கு கிளம்பி செல்லும்.

இந்த விமானத்தின் மூலம் இலங்கைக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது மதியம் திருச்சியில் இருந்து இலங்கைக்கு செல்லும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று கார்கோ சேவையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகள் முன்னறிவிப்பு இன்றி வெளியிடப்பட்டதோடு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அந்நிய செலவாணி பாதிக்கப்படுவதுடன் ஏற்றுமதிக்காக வைத்திருந்த பொருட்கள் பாதிப்படையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் விமான சேவை ரத்து காரணமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Categories

Tech |