Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை…. ஆக்கிரமிப்புகளை அகற்றனும்…. குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று  பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைப்பெற்றது.  இந்த கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த குறைதீர் கூட்டத்தில் சமூகநீதி பேரவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை ரோட்டின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணை அருகில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையை நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

Categories

Tech |