செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட வடமாநில மாணவர்கள், சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தில், மாணவர்கள் கற்களை வீசி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீப காலமாகவே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இதுபோன்று இரு தரப்பினர்களாக பிரிந்து மோதிக் கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது என்பது வருந்தத்தக்க செயலாக உள்ளது.