நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன் நாள் ஒன்றுக்கு 700 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் காரணமாக 90 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சி, நெல்லை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு காலை 7 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.