Categories
உலக செய்திகள்

திருச்சி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்… மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

திருச்சியில் சாலையோரம் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு  அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கின்றனர்.

திருச்சியில் சாலையோரங்களில் சுற்றுச்சூழல் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் உரிமையாளர்கள் கால்நடைகளை சாலைகளில் அழித்து விடக்கூடாது என மாநகராட்சி மூலம் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து வெளிமாவட்ட காடுகளில் விடுவதற்கான நடைமுறைகளை திருச்சி மாநகராட்சி தொடங்கியிருக்கிறது. அதன்படி முதல் முதலாக திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட 10-வது வாரத்தில் நேற்று ஒரே நாளில் 25 பன்றிகளை பிடித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காடுகளில் விடுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக  மேயர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்து  பேசியபோது திருச்சி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் இது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் பேரில் உரிய நடவடிக்கைகளை திருச்சி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள 25 பன்றிகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து மாடுகள் மற்றும் ஆடுகள் போன்ற கால்நடைகள்  சாலைகளில்  சுற்றி திரிவதால் அதற்கு உரிய அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  சாலையில் சுற்றி திரியும் தெருநாய்கள் தொல்லை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

5 கூட்டங்களிலும் கட்டடங்கள் கட்டி நாய்கள் இனவிருத்தியை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நான் பதவியேற்ற பின் பெறப்படும் மனுக்களில் பரிமாற்றம் பட்டா மாற்ற பதிவிறக்கம் செய்வது தொடர்பாக மக்கள் கொடுத்திருக்கின்றனர். மேலும் பாதாள சாக்கடை சில இடங்களில் கேட்டு மனு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த  இருக்கிறோம்.இலவச வீடுகள் வேண்டும் என கோரி அது தொடர்பான மனுக்கள் வந்துள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதியான பஞ்சபூர் அருகில் சுமார் 5000 வீடுகள் கட்டி கொடுப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு திட்டமிட்டு உள்ளார். இந்த திட்டம் ஒரு ஆண்டுக்குள் குடிசை மாற்று வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும்.தற்போது திருச்சி மாநகராட்சிக்கு 130 எம்.எல்.டி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது.

சில இடங்களில் தண்ணீர் வரவில்லை என்ற குற்றச்சாட்டு வந்தாலும் அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அப்பகுதிகள் முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் குடிதண்ணீர் காண புதிய பைப்புகள் மாற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பணிகள் விரைவில் சீர் செய்யப்படும்.
கோடை காலத்தில் திருச்சி மாநகராட்சி பொருத்தவரை தண்ணீர் தட்டுப்பாடு ஏதும் இருக்காது” இவ்வாறு கூறினார்.

Categories

Tech |