Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள்…. மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

மக்கள் குறைதீர் கூட்டம் மாதம்தோறும் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமானது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் நடத்துகிறது.

அதன்படி ஜூலை 27-ம் தேதி ஸ்ரீரங்கம்  அலுவலகத்திலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி அரியமங்கலம் அலுவலகத்திலும், செப்டம்பர் 28-ஆம் தேதி திருவரம்பூர் ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்திலும், அக்டோபர் 26-ஆம் தேதி பொன்மலை  அலுவலகத்திலும், நவம்பர் 30-ஆம் தேதி கோ அபிஷேகபுரம் அலுவலகத்திலும் நடைபெறும்.

இந்த முகமானது அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு வரிச்சலுகை, மின் இணைப்பு, கழிவுநீர், குடிநீர் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக மனு கொடுத்தால் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

Categories

Tech |