தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே திருச்சி திமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று மேயர் நாற்காலியை கைப்பற்றியுள்ளது. அதன்பின் அமைச்சர் கே என் நேரு வின் தீவிர ஆதரவாளரான அன்பழகனுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. இவர் தலைமையில் மாநகராட்சி வளர்ச்சி பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் திமுக ஆட்சியில் திருச்சி மாநகராட்சியின் முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி மாநகரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் சத்திரம் பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளை மேம்படுத்துதல் மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் பூங்கா அமைத்தல், மலைக்கோட்டை மின்விளக்குகளால் ஒளிரச் செய்தல், தில்லை நகரில் வணிக வளாகம், உய்யக்கொண்டான் வாய்க்காலை அழகுப்படுத்தும் பணிகள், அரியமங்கலம் குப்பை கிடங்கை புதுப்பித்தல் போன்றவை அடங்கும். அதனால் மாநகராட்சி சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால் திருச்சி மாநகரில் மேலும் பொலிவு பெற செய்யும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கான அவசர குழு கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் துணை மேயர் திவ்யா மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக திருச்சி மாநகராட்சியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள தளவாட பொருட்கள் வாங்குதல் திருச்சியில் அமைய இருக்கின்ற ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் போன்றவற்றிற்கு 349 புள்ளி 98 கோடி ரூபாய்கள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றை செயல்படுத்துவதற்கு அரசு நிர்வாக அனுமதி பெறுதல் உள்ளிட்ட 37 தீர்மானங்கள் மாநகராட்சி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு மேயர் அன்பழகன் உரிய விளக்கம் அளித்துள்ளார்.
இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து வரும் 30-ஆம் தேதி திருச்சி மாநகராட்சி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மேயர் அன்பழகன் அறிவித்துள்ள இது திருச்சி மக்களிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.