திருச்சி முகாம் சிறையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 6 இலங்கைத்தமிழர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் விசா காலாவதி, போலி பாஸ்போர்ட், போலி முத்திரையுடன் இந்தியா வந்த இலங்கை, நைஜீரியா, கென்யா ஆகிய நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் தண்டனை காலம் முடிந்தும் நாடு திரும்ப முடியாமல் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இலங்கை தமிழர்கள் 10 பேர் தங்களை விடுதலை செய்யக்கோரி சென்ற 20ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களான கபில், டெனிசன், கொண்பூசஸ், எப்ஸிபன், தினேஷ் மற்றும் டீலக்ஸ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திடீரென மயங்கி விழுந்தார்கள். இவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் மயங்கி விழுந்தாக கூறப்படுகின்றது. அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.