Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

திருச்சி இரண்டு என அழைக்கப்பட்டு வந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்டு தற்போது திருச்சி மேற்கு தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 7 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ  திமுகவின் முதன்மை செயலாளர் கே.என். நேரு. திருச்சி மேற்கு தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,68,379 ஆகும்.

திருச்சி மாநகராட்சியின் மையப் பகுதியாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்பு மூன்று ஆண்டுகளாக வெற்று வாக்குறுதியாகவே உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். போக்குவரத்து நெரிசலை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

முக்கிய குடிநீர் ஆதாரமாக உய்யகொண்டான் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கழிவுகள் அதிகளவில் கலப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட எதிர்க்கட்சி உறுப்பினரின் தொகுதி என்பதால் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நகரின் விரிவாக்கத்திற்கு ஏற்ப சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறுகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கப்பட வில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Categories

Tech |