Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோடு அருகே விபசாரத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள்”….. கைது செய்த போலீசார்….!!!!

விபச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் வாலரை கேட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைக்குள் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சேலத்தைச் சேர்ந்த 40 வயது உடைய பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இணையதளத்தில் உள்ள ஒரு செயலியின் மூலமாக விபச்சாரத்தை தொடங்கி அதில் தொடர்பு கொள்பவர்களிடம் பேரம் பேசி விபச்சாரத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரண்டு இளம் பெண்களை காப்பகத்திற்கு அனுப்பியும் சேலத்தை சேர்த்த பெண்ணை சேலம் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Categories

Tech |