Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“திருச்செங்கோட்டில் மகளிர் கைப்பந்து போட்டி”… சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற டாக்டர் சிவந்தி கிளப் அணி…!!!!

திருச்செங்கோட்டில் நடைபெற்ற மகளிர் கைபந்து போட்டியில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் சேலம் சாலையில் உள்ள திடலில் சென்ற 3 நாட்களாக லீக் முறையில் திருச்செங்கோடு கைப்பந்து கழகம் சார்பாக கைபந்து போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் சென்னை டாக்டர் சிவந்தி கிளப் அணியும் கோபி பிகேஆர் அணியும் மோதியதில் 2 க்கு 1 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் பின்னர் பரிசளிப்பு விழாவானது நடைபெற்றது.

இந்த விழாவில் முதலிடம் பிடித்த டாக்டர் சிவந்தி கிளப் அணி இரண்டாம் இடம் பிடித்த பீகே அணி மூன்றாம் இடம் பிடித்த கர்நாடக அணி நான்காம் இடம் பிடித்த சென்னை அணி உள்ளிட்ட அணிகளுக்கு சுழற்கோப்பையை தொழிலதிபர் குணசேகரன், திமுக மாவட்ட செயலாளர் செல்வக்குமார், கைப்பந்தாட்ட குழு தலைவர் யோகானந்தம் உள்ளிட்டோர் வழங்கினார்கள். இவ்விழாவில் எஸ்கேவி பள்ளி தலைவர் ரவி, திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல், ஒன்றிய தலைவர் சுஜாதா, தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன், செங்குந்தர் கல்லூரி டீன் பாலதண்டபாணி, அமைப்பு செயலாளர் அங்கப்பன், கைப்பந்தாட்ட குழு பொருளாளர் பாலசுப்ரமணியம், செயலாளர் சதாசிவம் ஆகிய பலர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |