சென்னையிலிருந்து தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். இதனையடுத்து இவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பேட்டரி கார் மூலம் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார். இதன் பின்னர் கோவிலின் பல்வேறு சன்னதியிலுள்ள சாமி தரிசனத்தை மேற்கொண்டார்.
சாமி தரிசனம் செய்யும் வேலையில் எப்பொழுதும் பகுத்தறிவு கொண்ட கலைஞர் குடும்பத்தில் பிரதான உறுப்பினராக இவர் இருப்பதால் அவ்வவ்போது விமர்சனங்கள் எழும்புகின்றன. இருந்தாலும் இவர் எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக சாமி தரிசனம் செய்து கொண்டுவருகிறார்.