Categories
மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் தயார்”…. போலீஸ் சூப்பிரண்டு தகவல்…!!!!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறமாக 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கும் அன்பு நகரில் இருக்கும் வியாபாரிகள் சங்கத்திடலில் 3000 வாகனங்கள் நிறுத்துவதற்கும் எப்சி குடோன் திடலில் சுமார் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் அமைக்கப்பட்டிருக்கின்றது.

கோவில் வளாகத்தில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களுக்கும் மேற்கூறிய இடங்களில் போலீசாருக்கு ஒத்துழைப்பு தந்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. சூரசம்ஹாரத்தை பார்ப்பதற்காக வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு கடற்கரை பகுதியில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டிருக்கின்றது.

பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு மற்றும் மீட்பு குழு கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் கடற்கரை ஓரங்களில் அமர்த்தபட்டு கடலில் ஆழமாக சென்று நீராடுவதை தவிர்ப்பதற்காக மிதவை பந்தைகள் மூலமாக எல்லை கயிறுகள் கட்டப்பட்டிருக்கின்றது.

மேலும் கடலோர போலீஸ் குழுமத்தின் சார்பாக படகுகள் மூலம் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். கூட்டுச் சம்பவங்களை தவிர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் 115 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கோவில் சுற்றுவட்டாரங்களில் 85 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் ட்ரோன்கள் கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. போலீசாருக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |