Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் விஐபி தரிசனம் பற்றிய உத்தரவுக்கு…. இடைக்கால தடை விதித்து அறிவிப்பு…..!!!!!

திருச்செந்தூர்சுப்பிரமணியம் சாமி கோவிலில் திருசுந்தரராக பணிபுரியும் சீதாராமன்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இவ்வழக்கினை விசாரித்த தனி நீதிபதி வழக்கு சம்பந்தமாக பல உத்தரவுகளை பிறப்பித்தார். அதாவது கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்த பணியாளர்களை அதிகரிப்பது, வி.ஐ.பி. தரிசனங்களை முறைபடுத்துவது, அடிப்படை வசதிகள் செய்து தருவது ஆகிய பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சுதந்திர பரிபாலனா ஸ்தலத்தார் சபை தலைவர் குமார் ஐயர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்து இருந்தார். இவ்வழக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் மனுதாரர் தரப்பில் இவ்வழக்கு சேவை சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை பொது நலன் வழக்காக விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில் அரசுத் தரப்பில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவை அனைத்தும் பொது மக்கள் நலன் சார்ந்தது, அனைவரும் சரிசமமாக சுவாமி தரிசனம் செய்வதற்காக இவ்வழக்கை பொதுநல வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீதிபதிகள், இவ்வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.

Categories

Tech |